[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"doc-detail-166113-en":3,"doc-seo-166113-105":31,"detail-sidebar-cat-1-en-105":92},{"code":4,"msg":5,"data":6},0,"success",{"doc_id":7,"user_id":8,"nickname":9,"user_avatar":10,"doc_module":11,"category_id":12,"category_name":13,"doc_title":14,"doc_description":15,"doc_content":16,"file_id":17,"file_url":18,"file_type":19,"file_size":20,"view_count":4,"is_deleted":4,"is_public":11,"is_downloadable":11,"audit_status":11,"page_count":21,"language":22,"language_code":23,"site_id":24,"html_lang":25,"table_of_contents":26,"faqs":27,"seo_title":28,"seo_description":15,"update_tm":29,"read_time":30},166113,7971461740886,"Theodore","https://ap-avatar.wpscdn.com/davatar_3d24733baf745e90a7e4bdd5f77d97b2",1,17,"Forms","விஞ்ஞான பைரவம் - தந்திர சாஸ்திர நூல்","விஞ்ஞான பைரவம் என்ற தமிழ் தந்திர சாஸ்திர நூல், மிகப் பழமையானதாகக் குறிப்பிடப்பட்டு 112 தியான நுட்பங்களை உள்ளடக்கியதாக விவரிக்கிறது. இந்நூல் தந்திரத்தின் சாரம், பைரவர்-பைரவியின் மெய்யுரு, சக்தி-சிவம் உறவு மற்றும் ஆத்ம சாதனை வழி ஆகியவற்றை கவிதைநடை உரையால் முன்வைக்கிறது. ஆன்ம அனுபவத்தில் உள்வெளி மூச்சு, புள்ளியியல் அமைதி, சக்கரங்களை தாண்டும் முறை, தியானம் மற்றும் பிரணவ மந்திர ஜபம் போன்ற நடைமுறை கருத்துகளை இணைத்து, சத்திய தரிசனத்திற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.","\u0003விஞ்ஞான பைரவம்\nஅச்சம் தெளிதல்\nதமிழில்: ஸ்ரீ ஸ்ரீ வேதானந்த\nஇது ஒரு தந்திர சாஸ்திர நூல். மிகப் பழமையான இந்த நூல் 112 தியான நுட்பங்களை உள்ளடக்கியது.\nநூலைப் பற்றி:\nபெயர்\t\t   :   விஞ்ஞான பைரவம்\nவகை\t   \t   :   தந்திர சாஸ்திர நூல்\nமொழி\t\t   : தமிழ்\nமூல நூல்\t\t   : ஆதிசிவன் தந்த ருத்திர யாமளம்\nதமிழாக்கம்\t   : ஸ்ரீ.ஸ்ரீ. வேதானந்த\nபக்கங்கள்\t\t   : 30 A4 size\nவிலை\t\t   : சிரத்தையுடன் படித்தல்\nபதிப்புரிமை\t   : இதனை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்றாலும் பயன்படுத்தும்போது இந்த ஆசிரியர் மற்றும் வலைதளம் பற்றி அவசியம் குறிப்பிடவேண்டும்\n\u0013 HYPERLINK \"http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/\" \\t \"_blank\" \u0014Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International\u0015\n\u0013 HYPERLINK \"http://sknathan12.wix.com/vedaspark\" \u0014http://sknathan12.wix.com/vedaspark\u0015\n\u0013 HYPERLINK \"http://www.vedaspark.weebly.com\" \u0014www.vedaspark.weebly.com\u0015\nAuthor contact id:  \u0013 HYPERLINK \"mailto:sknathan12@gmail.com\" \u0014sknathan12@gmail.com\u0015\n\u0004\nதேவி பேசுகிறாள்,\nஉருத்திர யாமளம் முழுவதும் கேட்டேன்\n‘த்ரிக தந்திர’மும் நான் அறிந்ததுதான்.\nஇருப்பினும் என் ஐயம் தீர்ந்திடவில்லை\nத்ரியம்பக! தங்கள் உண்மை உருவெது?\nஉம்முருவா பிரபஞ்சத்தின் ஆதார ஓங்காரம்?\nஉண்மை உருவை உணர்ந்திட வழியென்ன?\nபைரவ ஆகமத்தில் ஒன்பது வழிகளுண்டே!\nத்ரிசீர பைரவ தந்திரம் தானுண்டே?\nசக்தி முந்நிலை அறிந்தால் அறியலாமோ?\nநாத பிந்து கலைகள் உணர்த்துமோ?\nஆதார சக்கரங்கள் ஆறில் அது தெரியுமா?\nதடுக்கும் அரை நிலவு காட்டிட முடியுமா?\nஒருக்கால் சக்தியின் வேறான வடிவமா?\nஒருமையும் பன்மையும் ஒன்றாகக்கூடுமா?\nஒருமையா பன்முகமா உன் தன்மை?\nஒருமைக்கு மாறல்லவா பன்மை?\nஒருமையில் பேதங்கள் ஒன்றுதல் எங்ஙனம்?\nஅருள்வீர் ஐயனே என் ஐயம் அழிந்திட\nபைரவர் உரை செய்தார்,\nநன்றுரைத்தாய் நாயகியே! தந்திரத்தின் சாரமிது.\nஐயம் அகன்றிடவே தந்திர மறைப்பொருளை -\nபைரவ உருவென பாரோர் உரைப்பதை -\nசெவ்வனே உரைப்பேன் செவிமடுப்பாயே!.\nபைரவத்தின் சகர தத்வம் பயனற்ற கானல் நீர்.\nஆத்ம சாதனைக்கு அணுவளவும் பயனில்லை.\nஇந்திர கந்தர்வர் ஜாலத்தை ஒத்தது அது.\nநுட்பமற்ற புத்திக்கும், சலனமுற்ற மனதுக்கும்,\nதியானத்தில் திளைக்க – செயல்களைத்தான் நாடும்\nவீணருக்கானதது\nபைரவத்தின் உருவம் ஒன்பது வடிவிலில்லை,\nஅக்ஷ ரங்கள் எதிலுமில்லை\nத்ரி சீர பைரவமும் சக்தி முந்நிலையுமல்ல.\nநாதமும் பிந்துவும் அவ்வுரு காட்டாது\nதடையாகும் அரைநிலவும் தன்மை உணர்த்தாது\nஆதார சக்கரங்கள் ஆறை துளைத்தாலும்\nசக்தியதும் சத்தியத்தை காட்டிட வொண்ணாதே\nதாயும் குழந்தைக்கு சோறூட்ட சொல்லும் கதை\nபோலும் பைரவ உருவத்தின் வர்ணணைகள்\nசடங்குகள் பலவும் முதிர்வற்ற மாந்தர்தமை\nசத்திய தரிசனத்திற்கு ஈர்க்கும் இனிப்புகள்.\nசித்தம் அடங்கிய சித்தர் தமக்குள்ளே\nநித்தம் முகிழ்க்கும் ஆனந்தமாகவேதான்\nஇரட்டைகள் கடந்த ஒருமை வடிவாக\nவிரியும் சராசரத்தின் முழுமையும் தானாகி\nபைரவ – பைரவியின் மெய்யுரு தோன்றலாகும்.\nநீர்மையே சாரமாம் நீளுலகில் பைரவர்க்கு\nநீங்காது எங்கும் நிறைந்திருக்கும் தன்மையதாம்.\nமேலான உண்மைத் தன்மை இதுவாக\nமேவிடும் பூசனைக்குரியவர் யார்?ஏற்பவர் யார்?\nஉரைத்திட்ட பைரவத்தின் உண்மைத் தன்மைதனை\nஉள்ளத்தே உணர்ந்திட்ட உத்தம மாந்தர்\nபிரபஞ்சத்தின் ஆதார சக்தியென நிற்கின்ற\nபர தேவி இதுவென்று பார்த்திருப்பார்தானே\nவலிவுள்ளோன் அல்லாது வலிவும் வேறாமோ\nதாரணியைத் தாங்கும் தர்மமாம் பரதேவி\nதர்மத்தை தன்னுடலாய் கொண்டது பைரவம்\nதீயும் சுடும்தன்மையுமாய் பரதேவி பைரவமும்\nஆயின் இரண்டெண்பார் ஆரம்ப நிலைதனிலே\nமெய்யறிவுப் பாதை நுழைவாயில் அதுவாகும்.\nசக்தி நிலையதனில் சத்தியமாய் திளைப்பவர்கள்\nதானே சிவமாய் தனை உணர்வாரே\nதானே சிவமாய் தனை உணர்ந்தவர்கள்\nதானே சிவமாய் அமர்ந்திருப்பாரே\nஇத்தகு நிலையை சித்தர்கள் அடைவதால்\nசக்தியே சிவத்தின் முகவரி என்பார்\nவிளக்கின் ஒளியில், விரியும் கதிரில்\nவிளங்கி நிற்கும் திசை, வெளி, உருவம் போல்\nவிளங்கும் சிவமே, விளக்குதல் சக்தி!\nஇவ்வாறுரைத்த பைரவம் பணிந்து, தேவி உரை செய்தாள்:\nதேவ தேவனே! த்ரிசூலம் தாங்கியே!\nகபால மாலை உமக்கு அணிகலனாம்\nகாலம் வெளி திசை குண ரூபம் கடந்து நிற்கும்\nகோலம் விளங்க எனக்குரைப்பீரே\nஎவ்வழி பைரவ நிலை உணர்ந்திடுதல்?\nஎவ்வழி சக்தி, சிவத்தின் முகமெனல்?\nஅவ்வழி நானும் தெளிந்திடும் வகையில்\nசெவ்விய மலரடி பைரவ, உரைப்பீர்!\nபைரவர் உரைத்தார்:\nகாலம் கடந்து நிற்கும் பரதேவி தன்னியல்பால்\nகாற்றாய், ப்ராண அபானனாய் உருக்கொண்டாள்\nப்ராண அபானனின் தோற்றுவாய் தொட்டிட\nபூரணத்துவம் மானிடர்க்காகுமே\nஉள்வெளி மூச்சை ஊன்றியே பார்த்து\nதிரும்பும் புள்ளியை திருத்தமாய் உணர்ந்தால்\nபைரவ சாரம் வெளிப்படத் தோன்றும்\nபைரவி என்றிதை பாரோர் புகல்வர்\nஉள்வரு மூச்சு உறைந்திடும் போதில்\nஉள்ளீடான சக்தி உலவாதொழிந்த","cbCaib0DrUHwhv8O","https://ap.wps.com/l/cbCaib0DrUHwhv8O","docx",202010,25,"Tamil","ta",105,"en","# நூலைப் பற்றி\n## பெயர் மற்றும் வகை\n## மொழி மற்றும் மூல நூல்\n## தமிழாக்கம், பக்கங்கள், விலை/பதிப்புரிமை\n# தந்திரத்தின் சாரம்\n## பைரவர் உரை\n## சக்தி-சிவம் தொடர்பு\n# தியான வழிமுறைகள்\n## உள்வெளி மூச்சு மற்றும் புள்ளி\n## சக்கரங்கள், குண்டலி\n## தியானம், பிரணவ மந்திர ஜபம்","[{\"question\":\"விஞ்ஞான பைரவம் நூல் எந்த வகையைச் சேர்ந்தது?\",\"answer\":\"இது தந்திர சாஸ்திர நூலாக விவரிக்கப்படுகிறது. நூலில் பைரவர் உரை மற்றும் தியான வழிமுறைகள் இடம்பெறுகின்றன.\"},{\"question\":\"விஞ்ஞான பைரவம் நூலில் எத்தனை தியான நுட்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது?\",\"answer\":\"112 தியான நுட்பங்களை உள்ளடக்கியதாக நூல் பற்றிய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\"},{\"question\":\"ஆத்ம சாதனையில் முக்கியமாக எடுத்துரைக்கப்படும் சில கூறுகள் என்ன?\",\"answer\":\"உள்வெளி மூச்சை ஊன்றிப் பார்த்து திரும்பும் புள்ளியை திருத்தமாக உணருதல், அமைதியில் பைரவம் பளிச்சிடுதல், சக்கரங்களை தாண்டிடும் முறைகள் மற்றும் பிரணவ மந்திரம் ஜபித்த அமைதி போன்றவை குறிப்பிடப்படுகின்றன.\"}]","விஞ்ஞான பைரவம் - தந்திர சாஸ்திர நூல் | DOCX",1788183347,9,{"code":4,"msg":32,"data":33},"ok",{"site_id":24,"language":23,"slug":34,"title":14,"keywords":35,"description":15,"schema_data":36,"social_meta":87,"head_meta":89,"extra_data":91,"updated_unix":29},"vijnana-bhairava-tantric-treatise","",{"@graph":37,"@context":86},[38,55,69],{"@type":39,"itemListElement":40},"BreadcrumbList",[41,45,49,52],{"item":42,"name":43,"@type":44,"position":11},"https://docshare.wps.com","Home","ListItem",{"item":46,"name":47,"@type":44,"position":48},"https://docshare.wps.com/template/","Template",2,{"item":50,"name":13,"@type":44,"position":51},"https://docshare.wps.com/template/forms/",3,{"item":53,"name":14,"@type":44,"position":54},"https://docshare.wps.com/template/vijnana-bhairava-tantric-treatise/166113/",4,{"url":53,"name":14,"@type":56,"author":57,"headline":14,"publisher":59,"fileFormat":62,"inLanguage":23,"description":15,"dateModified":63,"datePublished":63,"encodingFormat":62,"isAccessibleForFree":64,"interactionStatistic":65},"DigitalDocument",{"name":9,"@type":58},"Person",{"url":42,"name":60,"@type":61},"DocShare","Organization","application/vnd.openxmlformats-officedocument.wordprocessingml.document","2026-08-31",true,{"@type":66,"interactionType":67,"userInteractionCount":4},"InteractionCounter",{"@type":68},"ViewAction",{"@type":70,"mainEntity":71},"FAQPage",[72,78,82],{"name":73,"@type":74,"acceptedAnswer":75},"விஞ்ஞான பைரவம் நூல் எந்த வகையைச் சேர்ந்தது?","Question",{"text":76,"@type":77},"இது தந்திர சாஸ்திர நூலாக விவரிக்கப்படுகிறது. நூலில் பைரவர் உரை மற்றும் தியான வழிமுறைகள் இடம்பெறுகின்றன.","Answer",{"name":79,"@type":74,"acceptedAnswer":80},"விஞ்ஞான பைரவம் நூலில் எத்தனை தியான நுட்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது?",{"text":81,"@type":77},"112 தியான நுட்பங்களை உள்ளடக்கியதாக நூல் பற்றிய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.",{"name":83,"@type":74,"acceptedAnswer":84},"ஆத்ம சாதனையில் முக்கியமாக எடுத்துரைக்கப்படும் சில கூறுகள் என்ன?",{"text":85,"@type":77},"உள்வெளி மூச்சை ஊன்றிப் பார்த்து திரும்பும் புள்ளியை திருத்தமாக உணருதல், அமைதியில் பைரவம் பளிச்சிடுதல், சக்கரங்களை தாண்டிடும் முறைகள் மற்றும் பிரணவ மந்திரம் ஜபித்த அமைதி போன்றவை குறிப்பிடப்படுகின்றன.","https://schema.org",{"og:url":53,"og:type":88,"og:title":14,"og:site_name":60,"og:description":15},"article",{"robots":90,"canonical":53},"index,follow",{"doc_id":7,"site_id":24},{"code":4,"msg":5,"data":93},[94,99,104,109,114,119,122,127,132],{"id":95,"doc_module":11,"doc_module_name":47,"category_name":96,"show_sort_weight":97,"slug":98},11,"Presentations",90,"presentations",{"id":100,"doc_module":11,"doc_module_name":47,"category_name":101,"show_sort_weight":102,"slug":103},12,"Resumes",80,"resumes",{"id":105,"doc_module":11,"doc_module_name":47,"category_name":106,"show_sort_weight":107,"slug":108},14,"Invoices",70,"invoices",{"id":110,"doc_module":11,"doc_module_name":47,"category_name":111,"show_sort_weight":112,"slug":113},15,"Posters",60,"posters",{"id":115,"doc_module":11,"doc_module_name":47,"category_name":116,"show_sort_weight":117,"slug":118},16,"Social Media",50,"social-media",{"id":12,"doc_module":11,"doc_module_name":47,"category_name":13,"show_sort_weight":120,"slug":121},40,"forms",{"id":123,"doc_module":11,"doc_module_name":47,"category_name":124,"show_sort_weight":125,"slug":126},18,"Letters",30,"letters",{"id":128,"doc_module":11,"doc_module_name":47,"category_name":129,"show_sort_weight":130,"slug":131},21,"Paper Templates",5,"papers-templates",{"id":133,"doc_module":11,"doc_module_name":47,"category_name":134,"show_sort_weight":4,"slug":135},158,"General","general-158"]